சென்னை : கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பொது, அரசு மருத்துவருக்கு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் எதிரொலியாக, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மருத்துவர் தாக்குதலை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் […]
சென்னை : மாமல்லபுரத்தில் “நோ பார்க்கிங்” போட்டிருக்கும் இடத்தில் காரை நிறுத்தக்கூடாது எனக் காவலாளர் ஒருவர் கூறியதற்கு, அந்த பகுதியில் காரில் வந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 4 பேரும் சேர்ந்து காவலரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட அந்த 4 பேரையும் உடனடியாக கைது செய்யவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியான […]
சென்னை : மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங் வழியே சென்ற காரை தடுத்த காவலாளி மீது, காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் காவலரைச் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைகளின் படி, நோ பார்க்கிங் போட்டிருந்தால், அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதையும் மீறி அந்த சாலையில், காரில் வந்த 4 பேர் தங்களுடைய வாகனத்தை இங்கே தான் நிறுத்துவோம் என்கிற தோரணையில் பேசி, […]
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு முதல் பல மாதங்களாகவே போர் நடைபெற்று வருகிறது. இதில், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். இதன் எதிரொலியாக மத்திய கிழக்கின் செங்கடல் பகுதி வழியாக செல்லும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், ஈரான் நாடு, ஹவுதி […]
கடந்தாண்டு செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனால், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல்கள் […]
செங்கக்கடல் தாக்குதலுக்கு பிறகு ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இரு நாடுகளும் இணைந்து தாக்குதல் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கின் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. ஏனென்றால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்கள் […]
கேரளாவில் நவ கேரள சதாஸ் என்ற யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது கேரள மாநிலத்தில் அரசின் சாதனைகளை மக்களுக்கு நேரில் சென்று எடுத்துரைக்கும் வண்ணம் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. இதற்காக பேருந்துகளில் கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயணித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் இந்த யாத்திரைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று பெரும்பாவூரில் இருந்து கொத்தமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த முதல்வர் பினராயி […]
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா அருகே நெஞ்சக மருத்துவமனை அருகே புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணியில் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பீகாரை சேர்ந்த சுபாஷ் குமார் மற்றும் சுனில் ஆகிய இருவரும் உணவு தயார் செய்வதர்க்காக அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கிவிட்டு, மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு வந்துள்ளனர். தொடர்மழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி..! மக்களுக்கு வெள்ள அபாய […]
கடந்த 30-ஆம் தேதி நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக பட்டியலின இளைஞர்கள் இருவரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல், அவர்களின் ஆடைகளை களைந்து, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்துள்ளது. மேலும், அந்த இளைஞர்கள் வைத்திருந்த ஏடிஎம் கார்டை பறித்து அதிலிருந்து ரூ.5000 பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் அவர்களிடமிருந்து தப்பி, ஆடைகள் இன்றி வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வடு […]
உக்ரைனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 51 பேர் பலியாகியுள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் கார்கிவ் பகுதியில் உள்ள ஹ்ரோசா கிராமத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஆறு வயது சிறுவனும் ஒருவர். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 19 மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பிறகு கார்கிவ்வில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது […]
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் தொடர்ந்து வரும் நிலையில், கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் வலைகளையும் பறித்து சென்றுள்ளனர். தாக்கப்பட்ட காரைக்கால் மேடு கிராம மீனவர்கள் ஏழு பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மயிலாடுதுறை […]
புதுக்கோட்டையில் அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை தாக்கிய போதை ஆசாமி. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை சித்திரா தேவி. இவர் ஆலங்குடி அருகே உள்ள கன்னியான்கொல்லை என்னும் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சித்ரா தேவி வழக்கம் போல் பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த வாணக்கன்காட்டைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர் போதையில், வகுப்பறைக்குள் நுழைந்து, ஆசிரியை சித்ரா தேவியை கன்னத்தில் […]
கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடியதால் பரபரப்பு. கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடியுள்ளனர். சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து அலுவலகம் உள்ளே புகுந்த கும்பல் கண்ணில் பட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. அந்த கும்பல் இந்திய மாணவர் சங்கத்தின் கொடியை ஏந்திருந்தாக கூறப்படுகிறது. இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தான் அலுவலகத்தை சூறையாடியதாக இளைஞர் காங்கிரஸார் குற்றசாட்டியுள்ளனர். கேரளா […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக புகார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதன்படி, பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஓபிஎஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சென்றுள்ளார். இந்த ஆலோசனையில் ஜெயக்குமார், […]
பாகிஸ்தானை சேர்ந்த அலி காஷிப் ஜானை பயங்கரவாதியாக அறிவித்தது இந்திய உள்துறை அமைச்சகம். கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் அலி காஷிப் ஜானை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967ன் கீழ் பயங்கரவாதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கைபர் பக்துன்க்வாவில் உள்ள சார்சடாவில் வசிக்கும் ஜான், பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர் என்றும், ஜெய்ஷ்-இ-முகமது […]
பெண்கள் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். இன்று பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வெளியில் சென்றாலே பாதுகாப்பு என்பது இல்லை என்பதை தான் உணர்கின்றனர். பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் நாள்தோறும் பெண்கள் ஏதாவது ஒரு வன்கொடுமைக்கு ஆளாகும் செய்தி நமது காதுகளுக்கு எட்டிய வண்ணம் தான் […]
பக்தியார்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்த பீகார் முதல்வரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள பக்தியார்பூர் எனும் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவரை சுற்றி பாதுகாப்புக்காக காவலர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் நிதிஷ்குமார் மேடையில் ஏறி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக சென்றுள்ளார். மலர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி மேடையில் […]
கார்கிவ் நகரிலுள்ள காவல்துறை அலுவலக கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் மீது 6 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே போரை முடிவுக்கு கொண்டுவர நேற்று முன்தினம் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்டை நாடான பெலாரஸில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்பபடவில்லை. இந்நிலையில், கார்கிவ் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதலில் 21 […]
நாகை:ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி,ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து விட்டு,மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். நாகையில் இருந்து நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில்,மீனவர்கள்,ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட இரண்டு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர்,அரிவாள்,ரப்பர் பைப்,கட்டை உள்ளிட்ட பொருட்களால் மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அதன்பின்னர்,படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி,செல்போன்,மீன்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து விட்டு,மீனவர்களை […]
சென்னை:சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு. சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல்ரஹீம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டது தொடர்பாக,பெண் காவல் ஆய்வாளர் நஜீமா உட்பட 9 காவலர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டக்கல்லூரி மாணவர் அப்துல்ரஹீம் முகக்கவசம் அணியாமல் சென்றபோது, வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த கொடுங்கையூர் போலீசார் மாணவரிடம் விசாரணை நடத்தினார்கள்.அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாணவரை கொடுங்கையூர் காவல்நிலையத்துக்கு அழைத்து […]