ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான், வடக்கு ஃபர்பாய் மாகாணத்தில் காவல் நிலையம் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், ஆறு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஃப்கான் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. காவல் நிலையத்தைக் குறிவைத்து தலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் பலியாகியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் […]
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் இராணுவமே ஆயுதங்களை வழங்குகிறது என ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு. ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்துக்குள் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்காவுக்கான ஆப்கான் தூதர் மஜீத் கரார், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தலிபான் இயக்கத்தினரிடம் இரவில் பார்க்கும் கண்ணாடி இருந்ததாகவும், இது பிரிட்டிஷ் நிறுவனத்திடம் இருந்து பாகிஸ்தான் ராணுவம் வாங்கிய கண்ணாடி என்றும் இது தீவிரவாதிகளுக்கு எப்படிக் கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் […]
காபூலில் வெடிகுண்டுகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வெடித்ததில் 17 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதைக் காவலர்கள் தடுத்து நிறுத்தியபோது அதில் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டைத் தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இந்தத் தாக்குதலில் காவல்துறையினர், அப்பகுதியில் நின்றிருந்தோர் என 17பேர் உயிரிழந்தனர். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 110பேர் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் […]
பிரிட்டனின் டென்ஹாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், உலகின் ஆடம்பரமான ஹோட்டல்களில் ஒன்றான இண்டர் காண்டினெண்டலுக்கு காபூலிலும் கிளை உள்ளது. இந்த விடுதிக்குள் நேற்றிரவு, துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள் சிலர் புகுந்து விருந்தினர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும், அங்கு தங்கியிருந்த பலரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தப்பி ஓடி வந்தவர்களுள் ஒருவரான உணவு விடுதியின் மேலாளர், 4 பேர் கொண்ட கும்பல், சமையலறை வழியாக நுழைந்ததாகவும், சிலரை சுட்டுக் கொன்றுள்ளதாகவும் தெரிவித்தார். விருந்தினர்கள் […]
பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சைக்கு பெயர் போன அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் ஒரு கௌரவத்தை வழங்கியுள்ளனர் . பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததாகக் கூறி வழங்கப்பட்ட இந்தப் பதக்கம் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு நிதியுதவி நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்துவருகிறார். தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதவரை அந்த நாட்டுக்கு உதவ முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. […]