#Tokyo2020: துப்பாக்கி சுடுதல் போட்டியில் சொதப்பிய துப்பாக்கி, வெளியேறிய இந்திய வீராங்கனை!

Manu Bhaker , who represented India in the shooting competition, missed out on the final due to a gun problem.

துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்று போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற மனு பாக்கரின் துப்பாக்கி கோளாறு காரணமாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் இந்தியா சார்பாக மனு பாக்கர் பங்கேற்றுள்ளார். துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் முன்னணியிலிருந்த மனு பாக்கரின் துப்பாக்கி கோளாறு காரணமாக சுமார் 20 நிமிடங்கள் அதை சரி பார்ப்பதில் நேரத்தை இழந்திருக்கிறார்.

இந்த சுற்றில் 36 நிமிடங்களில் 44 ஷாட்கள் சுட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார். அப்படியும் 600க்கு 575 புள்ளிகள் பெற்று 12வது இடத்துக்கு வந்துள்ளார். 577 புள்ளிகள் எடுத்திருந்தால் அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்க வாய்ப்பு இறுதியாகவும் கூறப்படுகிறது.

இதனால் தகுதி சுற்றில் இருந்து மனு பாக்கர் வெளியேறினார். துப்பாக்கி சுடும் மனு பாக்கரிடமிருந்து பதக்கம் கிடைக்கும் என்று நாடு நம்பியது. அவரது தொடக்க செயல்திறன் நன்றாக இருந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இறுதிப் போட்டிக்கு வரத் தவறிவிட்டார். இந்தியா சார்பாக பங்கேற்ற மற்றொரு வீராங்கனை யஷஸ்வானி 574 புள்ளிகளைப் பெற்று 13 வது இடத்தில் இருந்தார்.

இறுதிப் போட்டியில் இடம் பெற முதல் 8 இடங்களைப் பெறுவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி சுடுதல் போட்டியில், சீனாவின் ஜியான் ரான்சிங் 587 புள்ளிகளை பெற்று சாதனை படைத்தார். கிரேக்கத்தின் அண்ணா கோரக்கி மற்றும் ரஷ்யாவின் ஒலிம்பிக் கமிட்டியின் பி விட்டலினா மூன்றாவது இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.