டாப் 10 சர்வேதேச டி 20 பந்துவீச்சாளர் பட்டியலில் முஜீப் உர் ரஹ்மான்..!

ஜிம்பாப்வே ,ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளுக்கும்  இடையே பங்களாதேஷில் முத்தரப்பு போட்டி நடைபெற்றது. இறுதி போட்டிக்கு  பங்களாதேஷ் ,

ஜிம்பாப்வே ,ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளுக்கும்  இடையே பங்களாதேஷில் முத்தரப்பு போட்டி நடைபெற்றது. இறுதி போட்டிக்கு  பங்களாதேஷ் , ஆப்கானிஸ்தான் சென்றது.

இந்நிலையில் நேற்று டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் ஆனால் டாஸ் போடுவதற்கு முன் மழை பெய்ததால் டாஸ்  போடுவதற்கு சற்று தாமதமானது.

பின்னர் தொடர்ந்து பெய்த மழையால் போட்டி ரத்தானது.இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்த முஜீப் உர் ரஹ்மான் சர்வேதேச டி 20 போட்டி பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளார்.

unknown node

ஐசிசி தற்போது சர்வேதேச டி 20 போட்டியின் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.அதில் ஆப்கானிஸ்தான் வீரர்  முஜீப் உர் ரஹ்மான் 29 இடத்தில் இருந்து 9 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

மேலும் இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் முதல் பத்து இடத்தில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.