சென்னை : தமிழ்நாடு சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கிறது. ஆனால் அதற்குள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதே கூட்டணி, தேர்தல் பணிகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுக்களை பிரதான கட்சிகள் ஆரம்பித்து விட்டன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், விஜயின் தவெக மாநாடு முடிந்த பிறகு விஜய் பேசிய கூட்டணி பற்றிய கருத்துக்கள், அந்த மாநாட்டிற்கு வந்த தவெக தொண்டர்கள் கூட்டம் ஆகியவை மற்ற பிரதான கட்சிகளை சற்று உற்றுநோக்க வைத்துள்ளன. அதிலும் விஜய் […]
முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதி அனுமத்திக்கப்பட்டார். தங்கமணிக்கு விரிவான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அவரது சொத்து ஆவணங்கள் சரிபார்ப்பு. திருச்செங்கோடு அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சொத்து ஆவணங்கள் குறித்து வருவாய், பொதுப்பணித்துறை மற்றும் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில் தங்கமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்பு சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து விசாரித்து, அதனை மதிப்பீடும் பணியில் அதிகாரிகள் […]
அதிமுக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா உறுதியான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கமணி அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
டெல்லியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே சிங்கை நேரில் சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை. மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக மின்துறை தொடர்பாக 12 கோரிக்கைகளை கொண்ட மனுவை வழங்கினார். அதில், மின்சார சட்டத்தில் திருத்தும் கொண்டுவர முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் இருந்து 237.63 […]
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ்குமாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, மனைவி, மகன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக 2016 முதல் 2020 மார்ச் வரை ரூ. 4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை, நாமக்கல், கோவை […]
சொத்துக்குவிப்பு புகாரில் தங்கமணி அவரது, மகன் தரணிதரன், அவரது மனைவி சாந்தி மீது நாமக்கலில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை, நாமக்கல், கோவை உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திர மாநிலத்திலிருந்து 2 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக தங்கமணி, […]
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் பள்ளிபாளையம் அருகே ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் சோதனை நடைபெறுகிறது. மேலும், நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதியில் 69க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்துகின்றனர். ஏற்கனவே எம்.ஆர் […]
நிலக்கரி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுத்தால் நான் முழு மனதுடன் வரவேற்பேன். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள்,இன்று வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்க்கபட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது. அதாவது, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் பதிவேட்டில் மட்டும் […]
தனியார் நிறுவனம் மூலம் மின்வாரியத்துக்கு 30 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் ஆணை ரத்து என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மின்சார வாரிய பணியை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான அரசாணை திரும்பப் பெறப்படும் என்றும் மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை எனவும் மின் துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார். தமிழக மின்வாரியத்தை தனியார் மயமாக்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை. போராட்டம் நடத்திக்கொண்டிருக்காமல் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். […]
இன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வடியும் இடங்களில் மின்விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வருகிற நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக […]
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவார் புயல் வருகின்ற 25-ம் தேதி கரைக்கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் அமைச்சர் தங்கமணி செய்தியர்களிடம் பேசியபோது, நிவார் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின் துறை தயாராக உள்ளது.தேவையான அளவு மின்கம்பங்கள் கையிருப்பு உள்ளன, வருகின்ற 25-ஆம் தேதி புயல் கரையை கடக்கும்போது […]
மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்றும் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே […]
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்ததார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், கொரோனா தோற்றால் […]
மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அரசு.இந்நிலையில் மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் தங்கமணி, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மியாட் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.அமைச்சர் அன்பழகனின் […]
போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார் .மேலும் தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய, அமைச்சர் தங்கமணி மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை குறித்து அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து கூட்டத்தொடரில் ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் கேள்விகள் எழுப்பி விவாதத்தை நடத்தினர். அப்போது மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, சோலார் தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் எந்த […]
மின்கோபுரம் அமைப்பதாக தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள் என்று என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், விவசாய நிலத்தை அழித்து மின்கோபுரம் அமைப்பதாக தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். மின்கோபுரம் அமைப்பதற்கு மாற்றாக புதைவடம் அமைக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் கூட இல்லை.அரசு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டுமென்றால் மின் கோபுரங்கள் அமைத்துதான் ஆக வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில், 2015-ஆம் ஆண்டு ஜூன் முதல் தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக அம்மா அவர்கள் உருவாக்கி தந்தார்கள்.தமிழகத்தில் எப்பொழுதுமே தேவைக்கு ஏற்றவாறு புதிய மின் உற்பத்தி நிலையங்களாக இருந்தாலும் சரி ,துணை மின் நிலையங்களாக இருந்தாலும் சரி ஆரம்பித்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் எதிர்காலத்திலும் மின்வெட்டு பிரச்சினை இருக்காது.தேவையான அளவிற்கு மின்சாரம் உற்பத்தியாகி கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
பருவமழை காலத்திற்கு முன்பாக அனைத்து மின் கம்பங்களும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சென்னை சிட்லப்பாக்கத்தில் சேதுராஜன், மின்கம்பம் பழுதானதால் தான் உயிரிழந்தார் என்பது தவறான தகவல் ஆகும் .மின்சார வாரியம் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த மின்கம்பம் பழுதடைந்த தாக எந்த புகாரும் கிடையாது.மின்கம்பத்தின் மீது லாரி மோதியதால் தான் மின்கம்பம் பழுது ஏற்பட்டுள்ளது. காவல் […]