ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த ஒரே அரசியல்வாதி தங்கமணி தான் – அமைச்சர் செந்தில் பாலாஜி

Default Image

டெல்லியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே சிங்கை நேரில் சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை.

மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக மின்துறை தொடர்பாக 12 கோரிக்கைகளை கொண்ட மனுவை வழங்கினார். அதில், மின்சார சட்டத்தில் திருத்தும் கொண்டுவர முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் இருந்து 237.63 லட்சம் டன் நிலக்கரி தமிழகத்திற்கு வர வேண்டும் எனவும் இடம்பெற்றுள்ளன.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசு தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் நிதி நிறுவனங்களிள் இருந்து பெறக்கூடிய கடனுக்கான வட்டியை 8.50% ஆக நிர்ணயிக்கவேண்டும். மத்திய அரசின் மின்விநியோக நிறுவன சேவை கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு 1 பைசாவாக குறைக்க வலியுறுத்தியாக கூறினார்.

மேலும், மின்கட்டணம் அதிகரிக்கும் என வதந்தி பரப்புகிறார்கள், மக்கள் யாரும் அதை நம்பமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், வடசென்னை, தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் கண்ணனுக்கு தெரியாமல் நிலக்கரி காணாமல் போயுள்ளது என குற்றசாட்டினார்.

இந்திய வரலாற்றில் ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ள ஒரே அரசியல்வாதி என்ற பெருமையை முன்னாள் அமைச்சர் தங்கமணி பெற்றுள்ளார். கண் பார்வையில் இருந்து காணாமல் போன நிலக்கரி, கண்ணனுக்கு தெரியாத கிரிப்டோ கரன்சி என்ற இரண்டுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய தங்கமணி, என் மீது குற்றசாட்டு கூறுகிறார் என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி புரிதல் இல்லாமல் பேசி கொண்டியிருக்கிறார். கண்ணுக்கு தெரிந்த நிலக்கரிக்கும், கண்ணுக்கு தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி முதலில் பதில் சொல்லட்டும் என்றும் முதலில் கட்சிக்குள் அவர்கள் சுமுகமான முடிவு எடுக்கட்டும் என அதிமுக குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்