சிவசங்கர் பாபா மீது ஏற்கெனவே 4 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 போக்சோ வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் மாதம் டெல்லியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அப்போது சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் 2 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. […]
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து அவர்மீது போக்சோ வழக்கு உள்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவுக்கு நவம்பர் 16 வரை காவல் நீட்டித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், […]
சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் மேலும் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 3 போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவி ஒருவர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தாய் அளித்த புகாரின் அடிப்படியில் மேலும் ஒரு போக்சோ வழக்கு மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு […]
பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீதான வழக்கில் தற்போது விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபா மீது 3 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையையும் ஏற்கனவே தாக்கல் செய்தனர். தற்பொழுதும் இது குறித்ததான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 2011, 2012 மற்றும் 2013 இல் படித்த சுஷில்ஹரி பள்ளியின் மாணவிகளை சிவசங்கர் பாபா வலுக்கட்டாயமாக […]
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகளில் 2 வழக்குகள் போக்சோ பிரிவின் கீழ் பதிவான நிலையில் முதல் போக்சோ வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில்,மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி தகவல் தெரிவித்திருக்கும் நிலையில்,அவர் மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து,அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் […]
பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு எதிரான ஒப்புதல் வாக்குமூலங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ஆனால், 2 நாட்கள் மேற்கொண்ட விசாரணையிலேயே போதுமான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் அவருடைய பள்ளிக்கு அழைத்து […]
சிபிசிஐடி போலீசார், சிவசங்கர் பாபாவை சுஷீல் ஹரி பள்ளிக்கு அழைத்து சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சாத்தாங்குப்பம் பகுதியில் இருக்கும் சுஷீல் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் மீது அப்பள்ளியில் படிக்கும் சில மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி டெல்லியில் தலைமறைவாகியிருந்த சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். […]
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் 3 நாட்கள் விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரை அடுத்து அண்மையில் டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபா போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டது. அண்மையில் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
சிவசங்கர் பாபாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்ற சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து,கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.பின்னர், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து,சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதற்கிடையில்,உடல்நிலை […]