#BREAKING: சிவசங்கர் பாபாவுக்கு காவல் நீட்டிப்பு; மேலும் 2 வழக்குகளில் ஜாமீன்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு  கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து அவர்மீது போக்சோ வழக்கு உள்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் இன்று  ஆஜர்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவுக்கு நவம்பர் 16 வரை காவல் நீட்டித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சிவசங்கர் பாபாவுக்கு 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பெண்களை மானபங்கம் செய்ததாக சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிவசங்கர் பாபா மீது உள்ள 3 போக்ஸோ வழக்கில் ஏற்கனவே இரண்டில் ஜாமீன் பெற்றுள்ளார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.