73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் 73-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அணிந்திருந்த தொப்பியை போன்ற தொப்பியை அணிந்தபடி பிரதமர் மோதி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்ற்றுள்ளார்.
இளங்கலை,முதுகலை,முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு. தமிழகத்தில் இளங்கலை,முதுகலை,முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு http://ideunom.ac.in இணையதளத்தில் வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இளங்கலை,முதுகலை,முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இளங்கலை, முதுகலை, முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் நாளை மாலை வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு இளங்கலை, முதுகலை, முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு http://ideunom.ac.in இணையதளத்தில் வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு. புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை எனவும் வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் என என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30 -ம் தேதி மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]
நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சருடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு சூழல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தற்போது பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை […]
ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டாவது நாள் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தியாகராயர் நகரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கியதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியாக வடிவமைக்காத காரணத்தால் தி.நகரில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இது அதிமுக செய்த கோளாறு எனவே ஸ்மார்ட் […]
பிரதமர் தலைமையில் நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கூட்டத்தில் நாட்டின் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆன்லைனில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
திருச்சி என்.ஐ.டியில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியூர் சென்று திரும்பிய 577 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருச்சி என்.ஐ.டியில் கொரோனா உறுதியானவர்களில் பலர் வெளி மாநிலங்களைச் சார்ந்தவர்கள், மேலும் ஓமைக்ரான் தொற்றா..? என்பதை கண்டறிய மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை. சென்னை, தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார். இந்த கூட்டத்தின் போது சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
குற்றாலம் அருவிகளில் வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். புத்தாண்டு விடுமுறைக்காக ஏராளமானோர் வருவார்கள் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு கேரள அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. கேரளாவில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த இரவு ஊரடங்கானது இரவு […]
இமாச்சல பிரதேசம் மண்டி பகுதியில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று மாலை 6.50 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 28 ஆம் தேதி கான்பூருக்குச் செல்கிறார் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுவதற்காகவும், கான்பூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் பினா-பாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 28 ஆம் தேதி கான்பூருக்குச் செல்கிறார் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. PM Narendra Modi […]
கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு. தனியார் மருத்துமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் எக்காரணத்தை கொண்டும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற பரிந்துரை வழங்க கூடாது. தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தனிமைப்படுத்தல் காலகட்டத்திற்கு முன்பாகவே வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஒருவர் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் […]
அவந்திபோரா டிரால் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் தெரிவித்தார். இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சௌகாம் பகுதியில் பகுதியில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூரில் சத்துணவு மையத்தில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கியதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து 3 பேர் சஸ்பெண்ட் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் மதிய உணவு மற்றும் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் நாகனுரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகள் அழுகி அதில் புழுக்கள் இருந்தததும், முட்டையில் ஒரு வித துர்நாற்றம் வீசியதையும் அடுத்து புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து சத்துணவு […]
பஞ்சாப் மாநில மக்களவை எம்.பி.க்கள் சோனியா காந்தியை சந்திக்கிறார். இன்று மாலை 6.30 மணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பஞ்சாப் மாநில மக்களவை எம்.பி.க்கள் சந்திக்கிறார். காங்கிரஸின் ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கூட்டம் பின்னர் பேசிய பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சி சீட்டு வழங்க முடிவு செய்தது. இன்றைய கூட்டத்தில் 117 […]
ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அதிகரித்தால் மகாராஷ்டிர அரசு மாநிலத்தில் உள்ள பள்ளிகளை மூடக்கூடும் என்று அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்தார். ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் மகாராஷ்டிர அரசு மாநிலத்தில் உள்ள பள்ளிகளை மூடக்கூடும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்தார். “நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். மகாராஷ்டிராவில் இதுவரை 54 பேர் ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். காவல்துறையில் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்து சண்முகநாதன் பின்னர் கலைஞரின் உதவியாளராக பணியில் சேர்ந்தார். அபாரமான நினைவாற்றல் கொண்ட கடின உழைப்பாளியான சண்முகநாதன் கலைஞரின் நிழல் என அழைக்கப்பட்டார். கலைஞர் முதலமைச்சராக இல்லாத போதும் அவரது உதவியாளர் பணியில் தொடர்வதற்காக அரசு வேலையை […]