#Breaking:சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வாக்குமூலங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்...!

Confessions against Sivasankar Baba filed in High Court

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு எதிரான ஒப்புதல் வாக்குமூலங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ஆனால், 2 நாட்கள் மேற்கொண்ட விசாரணையிலேயே  போதுமான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் அவருடைய பள்ளிக்கு அழைத்து சென்று  விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது, லேப்டாப், 4 சீடிக்கள் மற்றும் பென்ட்ரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.பின்னர், அவர் பல ஆண்டுகளாக  பயன்படுத்திய yahoo இ-மெயிலை சிபிசிஐடி போலீசார் முடக்கம் செய்தனர்.

இந்த இ-மெயிலை முடக்கம் செய்த போலீசார், அதனை சைபர் ஆய்விற்கு உட்படுத்தி,மேற்கொண்டு ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, மாணவிகளிடம் ஆபாசமாக சாட் செய்த ஒரு ஸ்கிரீன் சாட்டும் கிடைத்துள்ளதாகவும் போலீசார்  தெரிவித்துள்ளனர்.

இதனால்,சிவசங்கர் பாபா மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,சிவசங்கர் பாபாவால் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்கள் அனைத்தையும் சேகரித்து,அதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும்,இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் ஜானகி சீனிவாசன்,பாரதி, திவ்யா,கனகாம்பிகை உள்ளிட்டோர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.