#Breaking:சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் – சிபிசிஐடி போலீசார் தீவிரம்...!

#Breaking: Two more cases against Sivasankar Baba - CBCID police intensify ...!

சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் மேலும் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 3 போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவி ஒருவர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தாய் அளித்த புகாரின் அடிப்படியில் மேலும் ஒரு போக்சோ வழக்கு மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக,அவர்மீது 1 போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.மேலும்,அவர்மீது உள்ள மற்ற போக்சோ வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.