#Breaking:சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது..!

Sivasankar Baba was arrested in another pocso..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகளில் 2 வழக்குகள் போக்சோ பிரிவின் கீழ் பதிவான நிலையில் முதல் போக்சோ வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார்.

இந்நிலையில்,மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி தகவல் தெரிவித்திருக்கும் நிலையில்,அவர் மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.