FIFA WorldCup2022: போலந்தை வீழ்த்தி 5 ஆவது முறையாக நாக் அவுட்-க்கு முன்னேறிய மெஸ்ஸியின் அர்ஜென்டினா.!

ஃபிஃபா உலகக்கோப்பையில் போலந்து அணியை வீழ்த்தி 5ஆவது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜென்டினா முன்னேறியுள்ளது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை 2022 தொடரில் குரூப்-சியில் இடம் பெற்ற லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா மற்றும் போலந்து அணிகள் இன்று விளையாடியது. இந்த ஆட்டம் ஸ்டேடியம் 974இல் நள்ளிரவு 12:30 மணிக்கு தொடங்கியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை, எனினும் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை … Read more

உக்ரைன் – ரஷ்யா மோதல் – போலாந்து செல்லும் அமெரிக்க அதிபர்!

உக்ரைன் – ரஷ்யா மோதலுக்கு மத்தியில் போலாந்து செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைன் – ரஷ்யா மோதலுக்கு இடையில் அடுத்த வாரம் போலாந்து செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அதாவது, மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் நெருக்கடியை தூண்டியதும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கான சர்வதேச பதிலைப் பற்றி விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மார்ச் 25-ஆம் தேதி போலந்துக்குச் செல்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் போலந்து நாட்டின் தலைநகர் … Read more

#Breaking:துப்பாக்கியால் சுடப்பட்ட இந்தியர் -ஆம்புலன்சில் சிகிச்சை!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,பல முக்கிய நகரங்களில் இன்றும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது. இதனையடுத்து,வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரைனை ரஷ்யா அழித்து வருகிறது எனவும்,வான்வெளி ஏவுகணை தாக்குதல் மூலம் வினிஸ்டா விமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார். இதனிடையே,ஆபரேசன் கங்கா திட்டத்தின்மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள … Read more

இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட 5000 கிலோவுக்கும் மேல் எடைக்கொண்ட குண்டு வெடித்தது!

5000 கிலோவுக்கும் மேல் இருக்கும் வெடிகுண்டை செயலிழக்கும் முயற்சியின் பொது வெடித்து சிதறியது. இரண்டாம் உலக போரின்போது வீசப்பட்ட குண்டுகள், பல இடங்களில் வெடிக்காமல் போனது.  அந்தவகையில், போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அது, 1945 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டினரால் வீசப்பட்டதாகவும், 5000 கிலோவுக்கும் மேல் எடைகொண்டுள்ளதாகவும், இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட மிகப்பெரிய குண்டுகளில் இதுவும் ஒன்று என கண்டறியப்பட்டுள்ளது. நீருக்குள் இருந்த அந்த வெடிகுண்டை செயலிழக்கும் முயற்சியினை போலந்து நேவி … Read more

கண்ணில் கருமை நிற டாட்டூ.! பார்வையை இழந்த இளம்பெண்.!

போலந்து நாட்டில் கண்களில் கருமை நிற டாட்டூ போட்டு பார்வையை இழந்து தவிக்கும் இளம்பெண்.   போலந்து நாட்டின் ரோக்லாவ் நகரை சேர்ந்த 25 வயது மாடலான அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற இளம்பெண், ராப் இசை பாடகர் மற்றும் ஃபைட்டரான போபெக் என்பரின் ரசிகையாகவும் இருக்கிறார். போபெக் தனது 2 கண்களில் கருநிற டாட்டோவை போட்டிருப்பார். அதுபோன்று தனக்கும் கண்களில் டாட்டூ போடவேண்டும் என்று அலெக்சாண்ட்ரா, டாட்டூ போடும் நபரை அணுகியுள்ளார். கண்களில் டாட்டூ போடும் அனுபவம் இல்லாத … Read more

போலந்தில் மேயருக்கு கத்தி குத்து…இளைஞர் வெறிசெயல்…!!

போலந்தில் நடந்த அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயர் பவுலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து நாட்டில் டாங்ஸ் நகரில் அறக்கட்டளை சார்பில் மருத்துவமனைக்கு  தேவையான உபகரணங்கள் வாங்க நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாங்ஸ் நகர மேயர் பவுல் பங்கேற்றார். அப்போது மேடையில் இருந்த மேயரை  மேடையேறிய அடையலாம் தெரியாத இளைஞர் ஒருவர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் நிலைகுலைந்து மேடையில் விழுந்த மேயர் பவுல் உடனடியாக மருத்துவமனைக்கும் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிசை பெறும் மேயர் கவலைக்கிடமாக … Read more

போலந்தை பொலந்து கட்டபோகும் சர்கார்………..வெளியான தகவல்……நியூ அப்டேட்….!!

போலந்து நாட்டில் சர்கார் படம்  வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் -இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சர்கார். படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இப்படத்தில் நடிகை வரலட்சுமி,பழ.கருப்பையா, யோகிபாபு, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.   சர்கார் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி படு ஹிட் அடித்த நிலையில் இந்தப் … Read more