போலந்தில் நடந்த அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயர் பவுலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து நாட்டில் டாங்ஸ் நகரில் அறக்கட்டளை சார்பில் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாங்ஸ் நகர மேயர் பவுல் பங்கேற்றார். அப்போது மேடையில் இருந்த மேயரை மேடையேறிய அடையலாம் தெரியாத இளைஞர் ஒருவர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் நிலைகுலைந்து மேடையில் விழுந்த மேயர் பவுல் உடனடியாக மருத்துவமனைக்கும் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிசை பெறும் மேயர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கத்தியால் குத்திய இளைஞரை காவல்துறை கைது செய்து விசாரித்ததில் அவர் ஏற்கனவே சிறைக்கு சென்றவர் என்றும் , சிறையில் குற்றவாளியாக இருந்த அந்த இளைஞரை மேயர் பவுல் சித்தரவதை செய்ததாகவும் அதனால் கத்தியால் குத்தியுயதாக அந்த இளைஞர் தெரிவித்தார்.