டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி அவர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த போக்ஸோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். குழந்தைகளின் ஆபாச படத்தை அந்த இளைஞர் தன் மொபைல் போனில் வைத்திருந்தார். ஆனால் , அதனை யாருடனும் பகிரவில்லை என்ற அந்த இளைஞர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு போக்ஸோ வழக்கை […]
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ஒரு நபர், நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில், தனது மகள் உட்பட 7 முதல் 10 வயது சிறுமிகள் 3 பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த மாதம் 30ஆம் தேதி 4ஆம் வகுப்பு படிக்கும் அப்பகுதி மாணவன் ஒருவன் , குற்றவாளி கூறியதன் பெயரில், சிறுமிகளிடம் சாக்லேட் தருவதாக கூறி அருகில் […]
மும்பையில் 13வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த்தாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலையைஏற்படுத்தியுள்ளது. மும்பை மாட்டுங்கா பகுதியில் உள்ள ஓர் பள்ளியில் கடந்த நவம்பர் 30-ம் தேதி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யபட்டதாக மும்பை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இரண்டு சிறுவர்கள் ஆவர். குற்றம் […]
மும்பையை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை ‘ITEM’ என்று கூறி துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் ஒருவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை சேர்ந்த இந்த தொழிலதிபர் 2015 ஆம் ஆண்டில் பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது 16 வயது சிறுமியின் தலைமுடியை இழுத்து ‘ITEM’ என்று கூறி எங்கே செல்கிறாய் என்று கேட்டு துன்புறுத்தியுள்ளார். இந்த வழக்கினை விசாரித்த மும்பை போக்சோ நீதிமன்றம் ஒரு பெண்ணை “ஐட்டம்” என்று அழைப்பது மற்றும் அவரது தலைமுடியை […]
கன்னியாகுமரி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படமெடுத்த ஆசிரியர் கிருஸ்து தாஸ், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் பகுதி அரசு பள்ளியில், அக்கவுண்டன்சி படமெடுத்துவந்த ஆசிரியர் கிருஸ்து தாஸ் என்பவர், தன்னுடைய வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச பாடம் எடுத்ததாக புகார் எழுந்தது. முதலில் அப்பகுதி காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி பெற்றோர்கள், பள்ளி […]
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே போடிபட்டி பகுதியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு,கடந்த 2020 ஆம் ஆண்டில் நவரசன் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்தும்,அதனை செல்போனில் வீடியோவாக எடுத்ததும் வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,சிறுமி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது சிறையில் அடைத்தனர். இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு, மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,சிறுமிக்கு பாலியல் […]
சென்னை:தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.அதன்படி,தமிழகத்திலும் சமீப காலமாகவே பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமுள்ளன.இதனைத் தொடர்ந்து,குற்றவாளிகள் மீது போக்சோ சட்டம் தமிழக அரசால் தொடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,இத்தகைய சூழலில்,பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பது மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை […]
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், முன்பு படித்த சின்மயா பள்ளியின் ஆசிரியர் வருண் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, சில பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் யாரையும் சும்மாவிடக்கூடாது என்று கைப்பட எழுதியிருப்பது அவர் அனுபவித்த வேதனையை சுட்டிக் காட்டுகின்றது. […]
ஆகஸ்ட் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு. சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏற்கனவே 2 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா கைதான நிலையில், […]
3-வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏற்கனவே 2 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா கைதான நிலையில், மேலும் ஒரு போக்சோ வழக்கில் […]
சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர், சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, அப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். ஆனால்,அங்கு சிவசங்கர் பாபா […]
பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை […]