#BREAKING: 3-வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது..!

3-வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏற்கனவே 2 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா கைதான நிலையில், மேலும் ஒரு போக்சோ வழக்கில் சி.பி.சி.ஐ.டி கைது செய்துள்ளனர். 3-வது வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவை இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.