பாகிஸ்தானில் டெலிவரி செய்யும் நபர் ஒருவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த திருடர்கள் டெலிவரி செய்யும் நபர் கண்ணீர் விட்டு அழுததும் மனம் திறந்து பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்துள்ள திருடர்கள். பாகிஸ்தானில் கராச்சி என்ற இடத்தில் டெலிவரி செய்யும் நபர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு வீட்டில் டெலிவரி செய்து விட்டு திரும்பும் பொழுது இரு சக்கரவாகனத்தில் 2 திருடர்கள் டெலிவரி செய்யும் நபர் பக்கத்தில் வந்து தனது […]
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிடும் படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், எந்த நாடும் இதுவரை பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்கவில்லை. கடந்த 5 ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறிய காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த விவகாரத்தில், அமெரிக்கா,சீனா நாடுகளிடம் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது.இரு நாடுகளும் […]
இந்தியாவுடன் இனி எந்தவித வர்த்தக உறவும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம்(AFP News Agency) தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2 நாட்காக கடும் முரண்பாடு இருந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஏ.எப்.பி செய்தி நிறுவனம்(AFP News Agency) வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தான் அரசு […]
பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய கப்பற்படை அதிகாரி குல்பூஷண்வை தூக்கிலிட சர்வேதச நீதிமன்றம் தடை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது. இந்திய கடற்படையில் அதிகாரியாக வேலை இருந்தவர் குல்பூஷண் ஜாதவ். 2016 ம் ஆண்டு பலுசிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டார். உளவு பார்க்கப்பட்ட பிரிவில் குல்பூஷண் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2017 ம் ஆண்டு அவரை தூக்கிலிட கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் புகைப்படத்திற்கு பதிலாக சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்தை பதிவிட்ட பிரதமரின் உதவியாளரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரதமரின் சிறப்பு உதவியாளராக இருப்பவர் நயீல்-உல்-ஹக். இவர் தனது டிவீட்டர் பக்கத்தில் 1969 ம் ஆண்டு என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். கருப்பு வெள்ளையாக இருக்கும் அந்த புகைப்படத்தை இது தான் பிரதமர் இம்ரான்கான் என்று குறிப்பிட்டு இருந்தார். அனால்,உண்மையில் அந்த புகைப்படமானது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்களது இளம் வயது புகைப்படம் […]
பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானிலிருந்து யாரும் பணம் அனுப்ப கூடாது என்றும் பாக்கிஸ்தான் அரசு இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நிதி கண்காணிப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரிஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச நிதி கண்காணிப்பு குழு விடுத்துள்ள அறிக்கையில்,உலகையே அச்சுறுத்தி வரும் தீவிரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நிதி உதவி செய்வதை பாகிஸ்தான் அரசு தீவிரமாக செயல்பட்டு தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். வரும் செப்டம்பர் மாதத்திற்குள் துரிதமாக செயல்பட்டு இந்த நடவடிக்கையானது […]
அபிநந்தன் விடுதலை குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படுமென பாகிஸ்தான் தெரிவித்தது. மேலும் அபிநந்தனை நாளை விடுவிக்கும் என்று பாக்கிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது இந்திய விமானப்படை […]
பாகிஸ்தான் பள்ளியில் 18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பள்ளி முதல்வருக்கு 105 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானில் பெஷாவரை சேர்ந்தவர் அத்தாவுல்லா மார்வத். இவர் அங்கு ஒரு பள்ளி நடத்தி வருகிறார். அதில் முதல்வராகவும் பணிபுரிகிறார். இவர் அங்கு படிக்கும் சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார்.18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவற்றை ரகசியமாக வீடியோ எடுத்தார். அதை தொடர்ந்து அவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி […]
பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி போட்டியிட்டது. அப்போது தேர்தல் பிரசாரம் செய்த இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்றால் ‘நவீன பாகிஸ்தானை உருவாக்குவேன். சர்வாதிகாரத்தை ஒழிப்பேன்’ என்றார். ஆனால் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பின் அதற்கு நேர்மாறான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் தலைமை செயலகம் உள்ளது. ’அங்கு நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ […]
ஆபாச வீடியோ கால், மற்றும் மாடல் அழகி மூலம் இந்திய இளம் விஞ்ஞானிகளுக்கு வலைவிரிக்கும் பாகிஸ்தான் உளவுத்துறை அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுடெல்லி பிரமோஸ் ஏவுகணை பிரிவில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்தனர். கவர்ச்சியான பெண்கள் மூலம் இந்திய ராணுவ வீரர்களை கவர்ந்து அவர்களிடம் இருக்கும் ரகசியங்களை சேகரிக்கும் திட்டத்தில் பாகிஸ்தான் நாடு ஈடுபட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை அமைப்பு ஏற்கனவே […]
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீப் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வரும் 18-ம் தேதி பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார். தனது நெருங்கிய நண்பர்களை இம்ரான் கான் தொலைப்பேசி மூலமும் அழைப்பு விடுத்து வருகிறார்.அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.முன்னதாக […]
பயங்கரவாத இயக்கங்கள் மூலம் இந்தியாவைத் துண்டாட பாகிஸ்தான் சதிசெய்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.தாத்ரா நகர் ஹவேலியில் (Dadra Nagar Haveli) பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பின்னர் உரையாற்றிய ராஜ்நாத்சிங், பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், இதுதொடர்பான சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு என்றேனும் அந்நாடு பணிந்தே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணவே இந்தியா விரும்புவதாகவும், பாகிஸ்தான் மட்டும் அதனைப் புரிந்து கொள்ள […]
பாகிஸ்தான் எழுநூறு கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் திறன்கொண்ட பாபர் ஏவுகணையைச் செலுத்திப் பரிசோதித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட பாபர் 1பி என்னும் பெயர் கொண்ட இந்த ஏவுகணை தரை மற்றும் கடல் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றது. இந்த ஏவுகணையில் ஜிபிஎஸ் வசதி செயல்படாமல் போனாலும் கூடக் குறித்த இலக்கைத் தாக்கும் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ள இந்த ஏவுகணை நேற்று வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத், எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்தால், அதை முறியடிக்க அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்தியா தயங்காது என எச்சரித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நிகழ்ச்சி ஒன்றின்போது, பிபின் ராவத் செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நாடாளுமன்ற குழு அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். நவீனமயமாக்கம் மற்றும் புதிய ஆயுதங்களை வாங்குவதற்கு நிதிநெருக்கடி இடையூறாக இருப்பதாகவும், இது போரிடும் திறன்களை குறுக்குவதாகவும் ராணுவம் தெரிவித்ததாக நாடாளுமன்ற குழு அறிக்கையில் […]
பாகிஸ்தான் பயிற்சியாளர் , தென் ஆப்பிரிக்காவில் ரன்குவிக்கும் விராட் கோலி, பாகிஸ்தானில் சதமடிப்பது கடினம் என சவால் விடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், தாம் விளையாடிய 9 நாடுகளிலும் சதமடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றார். ஆனால், பாகிஸ்தானில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில், விராட் கோலியின் பேட்டிங் திறமை குறித்து பேசிய பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் (mickey arthur), பாகிஸ்தான் மண்ணில் அவர் சதமடிப்பது […]