குல்பூஷண் ஜாதவ் வழக்கில் அதிரடி தீர்ப்பு – வழக்கின் முழு விபரம் அலசல்!
பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய கப்பற்படை அதிகாரி குல்பூஷண்வை தூக்கிலிட சர்வேதச நீதிமன்றம் தடை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது.
இந்திய கடற்படையில் அதிகாரியாக வேலை இருந்தவர் குல்பூஷண் ஜாதவ். 2016 ம் ஆண்டு பலுசிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டார். உளவு பார்க்கப்பட்ட பிரிவில் குல்பூஷண் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2017 ம் ஆண்டு அவரை தூக்கிலிட கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள தி ஹேங் என்னும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை உடனடியாக விசாரித்த சர்வதேச நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதி ரீமா ஓவர் முன்னாள் நடந்த வழக்கின் விசாரணையில், குல்பூஷண் ஜாதவை தூக்கிலிடும் முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசினை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. அதுவரை தூக்கிலிட தடை விதிப்பதாகவும் நீதிபதி தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தார்.