இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்தியா எனும் பெயருடைய தனது வளர்ப்பு பூனையை திருமணம் செய்து கொண்டுள்ளது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 40 வயதுடைய தெபொரா எனும் பெண்மணி தனது வளர்ப்பு பூனைக்கு இந்தியா என பெயரிட்டுள்ளார். இந்த பூனையுடன் சிட்காப் எனும் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வரக்கூடிய வீட்டின் உரிமையாளர் அவருடைய பூனையை அடிக்கடி துன்புறுத்துவதாகவும், பூனையை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுமாறு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அந்த பூனையை தெபொரா […]
நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் டெவோன் கான்வே மூன்று வருடமாக காதலித்து வந்த கிம் வாட்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஐபிஎல் சீசன் 15-வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது திருமணத்துக்காக ஐபிஎல் போட்டியில் இருந்து டெவோன் கான்வே விலகியுள்ளார். தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள டெவோன் கான்வே கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இவர்களது […]
பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் தற்போது தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய இவர்கள் தங்கள் குடியிருப்பை வண்ண விளக்குகளால் அலங்கரித்து பாலிவுட் பிரபலங்கள் சிலரையும் அழைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு கரீனா கபூர், சைப் அலி கான், நீத்து கபூர் […]
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியின் போது பார்வையாளராக இருந்த பெண் ஒருவர், தனது கையில் ஐபிஎல் கோப்பையை வெல்லும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை வைத்திருந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக ஆர்சிபி அணி மூன்று முறை ஐபிஎல் போட்டிகளில் […]
பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அவர்கள் பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்டுள்ளார். பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவர்களின் மகன் தான் தேஜஸ்வி யாதவ். இவர் தற்போது பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது பள்ளித் தோழியும் அரியானா மாநிலத்தின் தொழில் அதிபரின் மகளுமாகிய ராகேல் ஐரிஸ் என்பவரை நேற்று டெல்லியில் திருமணம் செய்து கொண்டுள்ளார். […]
திருமணமாகி ஒரே வாரத்திலேயே மனைவியின் கொடுமை தாங்காமல் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாமிலி எனும் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரக்கூடிய பிரயாஸ் என்பவர் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி கோமல் எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இந்த பிரயாஸ் என்பவர் திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில் தனது மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
தங்கள் பகுதியில் உள்ள சாலைகள் மோசமாக இருப்பதினால் பலருக்கு திருமணம் நடக்காமல் உள்ளதாக கர்நாடக மாநில முதல்வருக்கு இளம்பண் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவன்கரே எனும் மாவட்டத்தில் உள்ள ஹெச்.ராம்புரா எனும் கிராமத்தில் உள்ள பகுதியில் சாலைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை ஒருவர் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் எங்கள் […]
கர்நாடகாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்ததால், டாஸ் போட்டு பார்த்து ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியின் 27 வயதுடைய மகன் பக்கத்து கிராமத்தில் உள்ள 20 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதேபோல கடந்த 6 மாதத்திற்கு முன்பு இளைஞன் வேறு ஒரு கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் அறிமுகமாகி அவரையும் காதலித்து வந்துள்ளார். ஒரே […]
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே,தனது நீண்டநாள் காதலியை நேற்று திருமணம் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே,அவரது நீண்டநாள் காதலியான அஞ்சும் கானை நேற்று (வெள்ளிக்கிழமை) திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து,திருமண விழாவில் எடுத்த சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம்,பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும்,திருமணம் குறித்து சிவம் கூறுகையில்: “நாங்கள் அன்பை விட அதிகமான அளவு நேசித்தோம்,இப்போது,எங்களது வாழ்க்கை தொடங்குகிறது.”என்று பதிவிட்டிருந்தார். View this post on Instagram […]
ஏற்கனவே திருமணம் ஆனவர் திருமணமாகாத ஒருவருடன் இணைந்து வாழ முடியாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கருத்து. ராஜஸ்தானை சேர்ந்த ஹேமந்த் சிங் ரத்தோர் என்பவர் திருமணமாகாத ஒரு இளம் பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் ஹேமந்த் ஏற்கனவே திருமணமாகியாவர். இந்நிலையில் தங்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராஜஸ்தான் உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க […]
உலகின் மிகப்பெரிய பணக்கார ஜோடிகளான பில்கேட்ஸ் தம்பதிகள் தற்பொழுது விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உலகின் முதல் பணக்காரர் என அறியப்பட கூடியவர் தான் பில்கேட்ஸ். இவருக்கு தற்போது 65 வயதாகிறது. உலகின் மிகப்பெரிய மதிப்புள்ள நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கிய இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னதாக 1987 ஆம் ஆண்டு மெலிண்டா கேட்ஸ் அவர்களும், பில்கேட்ஸ் ஆகிய […]
இக்கட்டுரையில், நீங்கள் திருமணத்திற்குத் தயாராக இல்லை என்பதற்கான அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். நீங்கள் தற்போது உங்களது துணையை தேடிக்கொண்டுருக்கலாம் அல்லது நீங்கள் இருவரும் காதலித்துக்கொண்டு இருக்கலாம், ஆனால் நீங்கள் அவரை அல்லது அவளை திருமணம் செய்து கொள்வது குறித்து சந்தேகம் கொள்கிறீர்களா..? உண்மையில், இந்த கேள்வி உங்களுக்குள் தோணலாம். இல்லையென்றால் குடும்பத்தின் சூழ்நிலை அல்லது நீங்களே அவசரமாக திருமணத்திற்கு ‘ஆம்’ என்று சொல்லியிருக்கலாம். திருமணத்தை கண்டு பயம்: ஆண்களோ, பெண்களோ உங்களது நண்பர்கள் திருமணம் அல்லது […]
இந்த பதிவில், திருமணம் செய்து கொள்ள சரியான வயது எதுவென்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். முன்னாடி உள்ள காலங்களில் வாழ்க்கையின் முறை மிகவும் எளிதாக இருந்தது. முன்னாடியேல்லாம் காதல் பின்னர் கல்யாணம் அதன்பின் குழந்தை என இருந்தது. ஆனால், இப்போ உள்ள காலத்தில் உறவுகள் மிகவும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. திருமணம் முடிக்காமலேயே இளைஞர்கள் சேர்ந்து வாழ்வதும், குழந்தைகள் வேண்டுமென்ற எண்ணத்துடனும் வாழ தொடங்கிவிட்டனர். சமீபத்திய ஆய்வுகளின் படி, நம் இந்திய ஆண்கள் பெரும்பாலும் 25 வயதிலும், பெண்கள் […]
வறுமையை போக்க 3 திருமணம் செய்த பெண்மணிக்கு உடந்தையாக அவரது கணவன் மற்றும் மகனும் இருந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகமே மாறிவிட்டது என்று தான் சொல்லியாக வேணும். ஊரடங்கு பல்வேறு இடங்களில் பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வேலையின்றி தங்கள் நிலையை மறந்து திருடர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும் மாறியுள்ளனர். தற்பொழுது இந்த வறுமையின் காரணமாக பெண் ஒருவர் நூதனமான முறையில் கொள்ளையடிக்கிறார். 27 வயதுடைய மஹாராஷ்டிராவை சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 3 மாதத்தில் மட்டும் தனது கணவர் மற்றும் […]
தாலி கட்டும் நேரத்தில், ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள தனது காதலன் வந்து அழைத்து செல்வான் ஒரு மணி நேரம் பொறுங்கள் என கூறிய மணமகளால் மணமகன் மற்றும் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நபருக்கும், கோத்தகிரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. அவர்களின் சமுதாய வழக்கப்படி மணமகனை தாலி கட்டுவதற்கு முன்பு பிடித்திருக்கிறதா என மூன்று முறை சாமியார் கேட்கையில் மணப்பெண் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு கேட்ட போது பிரியதர்ஷினி […]
8 வருட காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் ஆசீட் வீசிய காதலி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா எனும் பகுதியை சேர்ந்த 27 வயதான பெண்மணி தான் சாந்தல். இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை பள்ளி பருவம் முதல் எட்டு வருடம் காதலித்து வந்துள்ளார். புனேவில் கடந்த 2 வருடமாக இப்பெண் வேலை பார்த்து வருகிறார். அண்மையில் அப்பெண்ணை புனேவில் விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி […]
லாஸ்லியா விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என தகவல் பரவி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் லாஸ்லியா பிரபலமானவர். மேலும், ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார் அதில் கதாநாயகியாக இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், லாஸ்லியா ரசிகர்களை அதிர்ச்சியூட்டும் வகையில் […]
தொகுப்பாளி திவ்யா கடந்த சில வருடங்களாக எந்த ஒரு தொலைக்காட்சியில் திவ்யாவை காணமுடியவில்லை. கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி திவ்யாவுக்கு திருமணம் நடந்துள்ளது. “வில்லு” படத்தில் “தீம்தனக்கா தில்லானா” என்ற பாடல் மூலம் பாடகராகவும் அறிமுகமானார். முன்பு ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சிகளில் உள்ள நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம் வந்தவர் திவ்யா. பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு தொலைக்காட்சியில் திவ்யாவை காணமுடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று […]
திண்டுக்கல் மாவட்டம் கவுண்டனுரை சார்ந்த மூக்கன் தம்பதியிடம் ,குளித்தலையை சார்ந்த ஒரு தம்பதி ரூ.15,000 கடன் வாங்கி உள்ளனர். வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாததால் தங்களது 13 வயது சிறுமையை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதி வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாங்கிய பணத்திற்காக தங்களது 13 வயது மகளை சரவணகுமாருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கவுண்டனுரை சார்ந்தவர் மூக்கன், இவரது […]
உத்தரபிரதேச மாநிலத்தில் மணமகன் திருமணமண்டபத்திற்கு குதிரையில் சென்றார். அப்போது அவர் சென்ற வழியில் சிலர் மருத்துவ கல்லூரி வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து மணமகனும் திருமணத்திற்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மஹோட்பா மாவட்டத்தை சார்ந்த ஒரு இளைஞருக்கும் , இளம் பெண்ணுக்கும் திருமண செய்ய இருவீட்டாரும் முடிவு செய்து இருந்தனர்.இவர்களின் திருமணம் கடந்த சிலநாள்களுக்கு முன் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தின் அன்று மணமகன் குதிரை மூலமாக திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக வந்தார்.அப்போது […]