தாலி கட்டும் நேரத்தில், தன் காதலன் வந்து அழைத்து செல்வான் ஒரு மணி நேரம் பொறுங்கள் என கூறிய மணமகள்!
தாலி கட்டும் நேரத்தில், ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள தனது காதலன் வந்து அழைத்து செல்வான் ஒரு மணி நேரம் பொறுங்கள் என கூறிய மணமகளால் மணமகன் மற்றும் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நபருக்கும், கோத்தகிரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. அவர்களின் சமுதாய வழக்கப்படி மணமகனை தாலி கட்டுவதற்கு முன்பு பிடித்திருக்கிறதா என மூன்று முறை சாமியார் கேட்கையில் மணப்பெண் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு கேட்ட போது பிரியதர்ஷினி இரண்டு முறை அமைதியாக இருந்துவிட்டு மூன்றாவது முறை கேட்கையில் இல்லை என கூறியுள்ளார்.
மேலும், தனது காதலனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் அவர்களை பொருட்படுத்தாமல் தன்னை அவர் காதலித்து வந்ததாகவும், அவர் வந்து தாலி காட்டுவார் ஒரு மணி நேரம் பொறுங்கள் எனவும், அவரின் குழந்தைகளை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அப்பெண் கூறியதால் மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் மணப்பெண்ணின் தாயார் அடித்து அதட்டினாலும், அப்பெண் தாலி கட்டிக்கொள்ள மறுத்துள்ளார். இதனால் செய்வதறியாது மணமகனும் குடும்பத்தினரும் திகைத்து போய் நிற்கின்றனர்.