மனைவியின் கொடுமை தாங்காமல் திருமணமாகி ஒரே வாரத்தில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!
திருமணமாகி ஒரே வாரத்திலேயே மனைவியின் கொடுமை தாங்காமல் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாமிலி எனும் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரக்கூடிய பிரயாஸ் என்பவர் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி கோமல் எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இந்த பிரயாஸ் என்பவர் திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில் தனது மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கு பின் அவரது சகோதரி சீமா என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது மனைவி மற்றும் மைத்துனர் நிதிஷ் குமார் ஆகியோரின் தொல்லை தாங்க முடியாமல் தான் தனது சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.