பள்ளி தோழியை கரம் பிடித்த பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்!

Bihar Opposition Leader Tejaswi Yadav is married to his school friend.

பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அவர்கள் பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவர்களின் மகன் தான் தேஜஸ்வி யாதவ். இவர் தற்போது பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில்,  இவர் தனது பள்ளித் தோழியும் அரியானா மாநிலத்தின் தொழில் அதிபரின் மகளுமாகிய ராகேல் ஐரிஸ் என்பவரை நேற்று டெல்லியில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது திருமண நிகழ்வுக்கு அவருடன் பிறந்தவர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என பலரும் வந்து வாழ்த்தியுள்ளனர். மேலும் இவரது திருமணத்திற்கு உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்களும் சென்றுள்ளார்.