பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அவர்கள் பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்டுள்ளார். பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவர்களின் மகன் தான் தேஜஸ்வி யாதவ். இவர் தற்போது பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது பள்ளித் தோழியும் அரியானா மாநிலத்தின் தொழில் அதிபரின் மகளுமாகிய ராகேல் ஐரிஸ் என்பவரை நேற்று டெல்லியில் திருமணம் செய்து கொண்டுள்ளார். […]
பீகார் சட்டசபை வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது வெட்கக்கேடானது என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வரின் அறையில் இருந்து சில தொலைவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலியான வெவ்வேறு ப்ராண்டுகளுடைய மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இந்த காலி மதுபாட்டில்கள் முதல்வரின் அறைக்கு அருகில் கிடந்தது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள […]
பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.நாளை பீகாரில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடையும் சூழலில் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி முதல் கட்ட தேர்தல் அக்., 28ந் தேதி நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல், நாளை நடைபெற உள்ளது.2ம்கட்ட தேர்தலுக்காக கடந்த சில நாட்களாகவே சூறாவளி பிரசாரத்தினை கட்சிகள் நடத்தி வந்த நிலையில் நேற்று மாலையுடன் பிரச்சாரங்கள் முடிவடைந்தது. இந்நிலையில் […]
இன்று பீகார் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது. பாதுக்காப்பு பணியில் 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாப் பரவலுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இச்சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.இன்று 71 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகார் தேர்தலில் மொத்தவேட்பாளர் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மொத்த வாக்களர்கள் 2.14 கோடி.தேர்தலில் […]