ஏற்கனவே திருமணமானவர் திருமணமாகாதவர் உடன் இணைந்து வாழ அனுமதிக்க முடியாது – ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஏற்கனவே திருமணம் ஆனவர் திருமணமாகாத ஒருவருடன் இணைந்து வாழ முடியாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கருத்து.
ராஜஸ்தானை சேர்ந்த ஹேமந்த் சிங் ரத்தோர் என்பவர் திருமணமாகாத ஒரு இளம் பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் ஹேமந்த் ஏற்கனவே திருமணமாகியாவர். இந்நிலையில் தங்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராஜஸ்தான் உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என கூறியுள்ளனர்.
அத்துடன் ஏற்கனவே திருமணமான ஒருவர் திருமணம் ஆகாத ஒருவருடன் சேர்ந்து வாழ்வதற்கு அனுமதிக்க முடியாது எனவும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே இது போன்ற ஒரு வழக்கு விசாரணையின் பொழுது திருமண வயதை அடைந்தவர்கள் திருமணமாகாத ஒருவருடன் இணைந்து வாழ்வதை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என கருத்து தெரிவித்து இருந்ததை சுட்டிக்காட்டி ஹேமந்த் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…
December 26, 2024![Today Live 26122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-26122024.webp)
புது புது முயற்சி விடாமுயற்சி! அசத்தல் அப்டேட் கொடுத்த அனிருத்!
December 26, 2024![anirudh Sawadeeka](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/anirudh-Sawadeeka.webp)
சண்டை போட்ட விராட் கோலி…அதிரடியாக அபராதம் போட்ட ஐசிசி!
December 26, 2024![virat kohli fight](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/virat-kohli-fight.webp)