மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14-ஆம் தேதி மீண்டும் சென்னை வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,ரஜினியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி அன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரியில் கட்சித் துவக்கம் என்றும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் பதிவிட்டார்.மேலும் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று […]
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 8 ஆம் நாளாக ஹரியானா, குஜராத் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, டிசம்பர் 3 ஆம் […]
விவசாயிகள் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தி வரும் நிலையில் ,இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,இன்று மாலை 3 மணி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.இரண்டு நாட்களுக்கு முன் இந்த அழைப்பு விடுக்கப்பட்டாலும் ,முதலில் விவசாய அமைப்புகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவா ? வேண்டாமா ? என்று ஆலோசித்து முடிவு […]
நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்த நிலையில் அதனை புறக்கணிப்பதாக விவசாய அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களுக்கு ஆதரவு ஒருபுறம் இருந்தாலும் ,மறுபுறம் எதிர்ப்பும் இருந்து வருகிறது.டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணியை நடத்தினார்கள்.பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்றனர்.ஆனால் டெல்லிக்குள் நுழையவிடாமல் போலீசார் வைத்திருந்த தடுப்பை மீறி விவசாயிகள் வந்ததால் […]
நிவர் புயல் பாதிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி ,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார் . வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயலானது, கரையை கடந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில், பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.இதனையடுத்து, புயல் கரையை கடந்த பிறகு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.இதனை அப்புறப்படுத்தும் பணியும் […]
தமிழகம் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காரில் இருந்து சாலையில் இறங்கி, சிறிது தூரம் நடந்து தொண்டர்களுக்கு கையசைத்தார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா, 2 நாள் சுற்றுப் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று தமிழகம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தடைந்தார். இன்று 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ,சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார் .சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் ஜெயக்குமார்,பெஞ்சமின், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்பு ,இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகச்சியில், தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம், உயர்மட்ட சாலை திட்டம்,சென்னை வர்த்தக […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் வைத்து முதல்வர் பழனிச்சாமி சந்திக்க உள்ளார் . மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம், உயர்மட்ட சாலை திட்டம்,சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளிட்ட ரூ.67,378 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னை வரும் அமித்ஷாவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் அவர்,சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார்.இதனால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்பு ,இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகச்சியில்,திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் […]
அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது அப்பட்டமாக தெரிகிறது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். 2018-ஆம் ஆண்டில் முதியவர் ஒருவர் தற்கொலை செய்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக பிரபல தொலைக்காட்சி ஊடகத்தின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இந்த வழக்கை மும்பை போலீசார் கையில் எடுத்து, அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்து […]
மத்திய அமைச்சர் அமித் ஷா ,மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.இதனிடையே நேற்று ராம்விலாஸ் பஸ்வான் நேற்று சிகிச்சை […]