தொண்டர்களை கண்ட மகிழ்ச்சி.. காரில் இருந்து இறங்கி நடந்து சென்ற அமித்ஷா!
தமிழகம் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காரில் இருந்து சாலையில் இறங்கி, சிறிது தூரம் நடந்து தொண்டர்களுக்கு கையசைத்தார்.
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா, 2 நாள் சுற்றுப் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று தமிழகம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்நிலையில், தமிழகம் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டப் போது, தொண்டர்களை கண்ட மகிழ்ச்சியில் காரில் இருந்து சாலையில் இறங்கி, சிறிது தூரம் நடந்து சென்று, அங்கிருந்த தொண்டர்களுக்கு கையசைத்தார்.