விவசாயிகள் போராட்டம்: பஞ்சாப் முதல்வருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 8 ஆம் நாளாக ஹரியானா, குஜராத் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, டிசம்பர் 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஏற்கனவே அறிவித்தது.
மேலும் இந்த பேச்சுவார்த்தைக்கு முன் விவாசாய அமைப்புகள், மத்திய அரசு கூறும் இடத்திற்கு தங்களின் போராட்டத்தை மாற்ற வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்த நிலையில், அதனை புறக்கணிப்பதாக பல விவசாய அமைப்புக்கள் தெரிவித்தது. இந்தநிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025