தமிழகம் வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா

Union Home Minister Amit Shah arrived in Tamil Nadu. Chief Minister Palanichamy and Deputy Chief Minister O. Panneerselvam welcomed him at the Chennai airport.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தடைந்தார்.

இன்று 2 நாள் பயணமாக  டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ,சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார் .சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர்  பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் ஜெயக்குமார்,பெஞ்சமின்,தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர்வரவேற்றனர்.

பின்பு ,இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகச்சியில், தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம், உயர்மட்ட சாலை திட்டம்,சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளிட்ட ரூ.67,378 கோடியிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.மேலும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமை வகிக்கிறார் . துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். இதனைத்தொடர்ந்து அமித்ஷாவும் உரையாற்றவுள்ளார்.இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் ,அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் மேற்கொள்ள உள்ளார்.எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இறுதியாக நாளை காலை தனி விமானத்தில் அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

தமிழகம் வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா