சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்- ஹர்பஜன் வாழ்த்து!

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இன்று நடிகர் ரஜினிகாந்தின் 72-வது பிறந்த நாள் ஒட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், “என் மாருமேல சூப்பர் ஸ்டார்” 80’s பில்லாவும் நீங்கள் தான் 90’s பாட்ஷாவும் நீங்கள் தான் … Read more

நம்ம டீம் செம வலிமை மாப்பி ! தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெர்ல -தமிழில் ட்வீட் செய்த ஹர்பஜன்

 தளபதி ஸ்டைல்ல தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெர்ல என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.  2020க்கான ஐபிஎல் 13வது கிரிக்கெட் தொடர் வரும் 29ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும் சென்னை அணியும் பலப்பரீட்சை செய்கிறது. இதற்கானப் பயிற்சியை ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் … Read more

IPL2020: கோப்பை இந்த அணிக்கு தான்-அடித்து கூறும் ஹர்பஜன்..!ஐபிஎல் ஸ்பெஷல்

ஐபிஎல்2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று, சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலை மற்றும் கலச்சார விழாவின் இறுதி நாளில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன், கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தார்.இதில் நடைபெற்ற போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.இதன் பின் பேசிய அவர்  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் … Read more

மனிதனாக இருப்பதுதான் அவர் செய்த குற்றம்.! ஜாமியா மாணவருக்காக வருந்திய ஹர்பஜன்.!

சிலநாள்களுக்கு முன் ஜாமியா மிலியா மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் மினாஜுதின் என்ற மாணவர் தனது இடது கண் பார்வையை இழந்தார். இது குறித்து ஹர்பஜன்சிங் மனிதனாக இருப்பதுதான் அவர் செய்த குற்றம் .தனக்கு நடந்த கொடுமையை அவர் கூறும்போது கேட்பதற்கு வருத்தமாக உள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவையிலும் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா எதிர்ப்பு … Read more

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் !விக்ரமுடன் அவர் ,சந்தானத்துடன் இவர்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுக மாக உள்ளனர்.  கடாரம் கொண்டான் படத்தினை அடுத்து சியான் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இவர் இதற்க்கு முன்னர் டிமான்டி காலணி, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.இப்படத்தின் மூலம் தான் இந்திய கிரிக்கெட் நட்சத்திர ஆல் -ரவுண்டர் இர்பான் பதான் தனது திரையுலக … Read more

ஆங்கிலம் தெரியாததால் கஷ்டப்பட்டேன் ஹர்பஜன் ஓபன் டாக் ..!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஹர்பஜன்சிங். தற்போது ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில்    தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்பட்டது தொடர்ந்து பேசி உள்ளார். இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய ஹர்பஜன் ,  நான் முதன்முதலாக 1998-ம் ஆண்டு பெங்களூருவில் … Read more

தல , தளபதி படத்தின் தலைப்பை வைத்து கொள்ளையர்களை விரட்டிய தம்பதியை பாராட்டிய ஹர்பஜன்!

திருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள  கல்யாணிபுரத்தில் சண்முகவேல் என்பவர் தோட்டத்து வீட்டில் இரண்டு முக மூடி திருடர்கள் நுழைந்தார்கள்.அப்போது அதில் இருந்த ஒரு திருடன்  சண்முகவேல் கழுத்தில் துண்டு வைத்து நெரித்தார். அந்த திருடனிடம் இருந்து தப்பிக்க சண்முகவேல் போராடி கொண்டு இருந்தார்.அப்போது அவரது மனைவி செந்தாமரை வீட்டின் முன் இருந்த செருப்பு , சேர் போன்றவை கொண்டு அந்த திருடர்களை தாக்கினர். பின்னர் சண்முகவேல் தப்பித்து கணவர் -மனைவி இருவரும் தங்களிடம் கிடைத்த பொருள்களை … Read more

"பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும்" என ட்விட் செய்த ஹர்பஜன் சிங்

நேற்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். நேற்று முந்தினம் பிறை தெரிந்ததை தொடர்ந்து நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் , சினிமா துறை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை இஸ்லாமிய மக்களுக்கு தெரிவித்தனர்.  நேற்று இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர்  ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.அந்த பதிவில் “பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும்” என குறிப்பிட்டு … Read more

மீண்டுவா நேசமணி ! அத மட்டும் செஞ்சிருந்தா …. ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட்

சமீப காலமாக ட்விட்டரில் பல ஹாஸ்டேக்குகளை  ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.அந்த வகையில் நேற்று  ட்விட்டரில் நேட்டீசன்கள் #PrayForNesamani  என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.இந்தியா மற்றும் சென்னை ட்ரெண்டிங்கில் முதல் இடத்திலும் மற்றும் உலக அளவில் #Pray_For_Neasamani    ட்ரெண்டானது.இது தொடர்பாக பல பிரபலங்களும் ட்விட்டரில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து மிகவும் பிரபலமானவர். அவர் பதிவிடும் ட்விட் அனைவரின் மத்தியிலும் … Read more

வீடியோ: ‘தோனி கை தட்ட’ ‘சென்னை பாய்ஸ் டான்ஸ் ஆட’!! சென்னை டீமின் அடாவடி ஆட்டம் ஆரம்பம்!!

12வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ப்ரோமோசன் மற்றும் விளம்பர வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது இந்தியாவில் 12வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியிலும், பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒன்றிணைத்துள்ளது. ஒரு வருடத்திற்குப் பின்னர் இணை ந்துள்ள இவர்கள் அடிக்கும் லூட்டி படு ஜோராக உள்ளது. … Read more