IPL2020: கோப்பை இந்த அணிக்கு தான்-அடித்து கூறும் ஹர்பஜன்..!ஐபிஎல் ஸ்பெஷல்
ஐபிஎல்2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று, சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலை மற்றும் கலச்சார விழாவின் இறுதி நாளில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன், கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தார்.இதில் நடைபெற்ற போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.இதன் பின் பேசிய அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் மாணவர்கள் கடுமையாக உழைத்து தங்களது கனவு மற்றும் லட்சியத்தை அடைய வேண்டும்.தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டுங்கள், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள் என்று அறிவுரையும் வழங்கினார். பின்னர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்,