தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் !விக்ரமுடன் அவர் ,சந்தானத்துடன் இவர்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுக மாக உள்ளனர்.
கடாரம் கொண்டான் படத்தினை அடுத்து சியான் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இவர் இதற்க்கு முன்னர் டிமான்டி காலணி, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.இப்படத்தின் மூலம் தான் இந்திய கிரிக்கெட் நட்சத்திர ஆல் -ரவுண்டர் இர்பான் பதான் தனது திரையுலக பயணத்தை தொடங்க உள்ளார்.அதாவது விக்ரமின் இந்த படத்தில் நடிக்க உள்ளார் இர்பான் பதான்.இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான Seven Screen Studio வெளியிட்டுள்ளது.
என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் @kjr_studios,#dikkiloona @SoldiersFactory,@iamsanthanam குழுவுக்கு நன்றி.#தலைவர் #தல #தளபதி உருவாகிய பூமி.#தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே.உங்களால் வெள்ளித்திரையில்.இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன் pic.twitter.com/W3uIkFgcg5
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 14, 2019
அதேபோல் சந்தானம் நடித்து வரும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் நடிக்க உள்ளார். சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து மிகவும் பிரபலமானவர். அவர் பதிவிடும் ட்விட் அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெரும்.சந்தானம் நடித்து வரும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பை ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இரண்டு நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் அறிமுகம் அறிவிப்பு ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.