அண்ணா எழுதிய புத்தகங்கள் மற்றும் சில புத்தகங்களை இபிஎஸ்க்கு அனுப்பிவிட்டு, திராவிடம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அதிமுகவை அடிமைகள் முன்னேற்ற கழகம் என மாற்றிவிடுங்கள் – என திமுக சுற்றுசூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி இபிஎஸ்க்கு டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். திமுக கட்சியின் சுற்றுசூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேயா சிவசேனாபதி , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார். அது குறித்து தனது டிவிட்டர் […]
தஞ்சை மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தஞ்சாவூர் மூப்பனார் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் 11 அடி உயரமுள்ள முழு உருவச்சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.237 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை நாளை முதலமைச்சர் வழங்குகிறார்.
திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர் தான் தமிழக அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா என அறியப்படும் சி.என்.அண்ணாதுரை. நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளி படிப்பை சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், அதன்பின் கல்லூரி படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும் கற்றுள்ளார். கல்லூரி முடித்தவர்கள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் எனும் […]
மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மறந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர்த்தூவி மரியாதையை செலுத்திய பின் தயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். இதனைத்தொடர்ந்து, முதல்வர் முக ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, துரைமுருகன், கேஎன் நேரு […]
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும் நடிகருமாகிய கமல் அண்ணாவிற்கு புகழாரம் சூட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 52 ஆவது நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு தலைவர்களும் அண்ணாவின் சிலைக்கு மாலை தூவி மரியாதை செலுத்தி அண்ணாவின் பெருமைகளை பேசி வரும் நிலையில், தற்போது மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும் தமிழ் திரை உலகின் நடிகருமாகிய கமலஹாசன் அவர்கள் தனது […]
இன்று பேரறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு தினம் அனுசரிக்கபட்டு வருகிற நிலையில், அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இன்று பேரறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இவர் தமிழகத்தில் ஆறாவது முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். திராவிட சிந்தனைகள் மக்கள் மத்தியில் கொண்டு சென்று, சீர்திருத்த திருமணம், இரு மொழிக் கொள்கை, தமிழ்நாடு என பெயர் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளில் […]
எப்பொழுதும் தமிழ் தமிழ் என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா என அவரது நினைவு தினத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 52 ஆவது நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. இவரது நினைவு தினத்திற்கு பலரும் புகழாரம் சூட்டி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணா அவர்கள் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தின் உரிமைக்காக போராடியவர் அண்ணா எனவும், […]
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வரான அண்ணா அவர்களின் 112வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இவரது பிறந்த நாளுக்கு பலரும் வாழ்த்துக்களும் மரியாதையும் செலுத்தி வரும் நிலையில், அண்ணாவின் உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர். மேலும், முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நெஞ்சிலே […]
இன்று அண்ணாவின் 110 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடியில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணாவின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ., மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். DINASUVADU
அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மேலும் பொதுச்செயலாளர் க.அன்பழகன், கனிமொழி உள்ளிட்டோரும் உடன் மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தினர். DINASUVADU