அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
தஞ்சை மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தஞ்சாவூர் மூப்பனார் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் 11 அடி உயரமுள்ள முழு உருவச்சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.237 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை நாளை முதலமைச்சர் வழங்குகிறார்.