தமிழ், தமிழ் என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா – முதல்வர் பழனிசாமி!
எப்பொழுதும் தமிழ் தமிழ் என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா என அவரது நினைவு தினத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.
இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 52 ஆவது நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. இவரது நினைவு தினத்திற்கு பலரும் புகழாரம் சூட்டி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணா அவர்கள் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழகத்தின் உரிமைக்காக போராடியவர் அண்ணா எனவும், தமிழ்மொழி, தமிழினம் என எப்பொழுதும் தமிழ் தமிழ் என தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்களை அவரது நினைவு தினத்தில் போற்றி வணங்கி மகிழ்கிறேன் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன். #அறிஞர்அண்ணா pic.twitter.com/t14TvJN1VA
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 3, 2021