விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக வீரர்கள் அறிவிப்பு.! யார்கர் மன்னன் நடராஜன் தேர்வு.!

The Tamil Nadu Cricket Board has released the list of Tamil Nadu players for the Vijay Hazare tournament.

விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக வீரர்கள் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையில் மொத்தம் 20 வீரர்கள் பங்கேற்கும் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. விஜய் ஹசாரே போட்டியில் யார்கர் மன்னன் நடராஜன் தமிழக அணிக்காக விளையாடுகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தினேஷ் கார்த்திக் தலைமையில், தமிழக அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது. கடந்த 2006-07ம் ஆண்டு முதல் முறையாக தமிழக அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றதை தொடர்ந்து, 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node