#T20WORLDCUP2022: யூ.ஏ.இக்கு எதிராக நெதர்லாந்து அணி த்ரில் வெற்றி.!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் யூ.ஏ.இ அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து மற்றும் யூ.ஏ.இ(UAE) அணிகள் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த  யூ.ஏ.இ(UAE) அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முஹம்மது வசீம் 41 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 3 விக்கெட்களும், ஃப்ரெட் கிளாசென் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

112 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி முதலில் நிதானமாக விளையாடினாலும் பின்னர் கொஞ்சம் தடுமாறியது. ஆட்டத்தின் கடைசி பந்து வரை பரபரப்புடன் சென்ற இந்த போட்டியில் நெதர்லாந்து அணி  7விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து த்ரில் அணி வெற்றி பெற்றது. பாஸ் டி லீடே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar
Bengaluru
Lokesh Kanagaraj - Vijay
mugamathu kaif about pant
Donald Trump - Kamala Haaris