டி20I:இன்று நடைபெற்ற டி20 போட்டியில் வங்கதேச வீரரான டன்சிட் பேட்டிங் விளையாடும் பொழுது தமிழ் படமான ‘ஜீவா’ படத்தில் உள்ள காமெடி காட்சி போல ஒரு நிகழ்வு அரங்கேறி உள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் வங்கதேச அணியும், நெதர்லாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன் மூலம் பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி நன்றாகவே விளையாட்டை தொடங்கி விளையாடியது.
சரியாக, 3-வது ஓவரின் (2.5 ஓவர்) 5-வது பந்தில் நெதர்லாந்து அணியின் வேக பந்து வீச்சாளரான கிங்மா வீசிய வேகமான பந்தானது பவுன்சாகி பந்தை அடிப்பதற்கு தயாராக இருந்த வங்கதேச வீரரான தன்சித் ஹசனின் தலைகவசத்தில் சென்று சிக்கி கொள்ளும்.
இதனால், தலைக்கவசம் அணிந்ததன் காரணமாக அதிர்ஷ்டவசமாக தன்சித் ஹசனுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. மேலும், இந்த சம்பவமானது தமிழ் படமான ‘ஜீவா’ திரைப்படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியை ஞாபகப்படுத்தியுள்ளது.
விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா நடிப்பில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவான திரைப்படமான ‘ஜீவா’ திரைப்படத்தில் ஒரு காமெடி காட்சியில் சூரி இதே போல பந்தை அடிப்பதற்கு முயற்சி செய்யும் பொழுது அந்த பந்தானது அவரது தலைக்கவசத்தில் சிக்கி கொள்ளும்.
இது காமெடி அந்த சமயம் ரசிகர்களிடேயே பயங்கர ஹிட் அடித்தது. தற்போது, சினிமாவில் காண்பித்த ஒரு கற்பனை காட்சியை போல உண்மையில் அரங்கேறி இருப்பதால், ரசிகர்கள் இந்த வீடியோவை பகிருந்து வருவதோடு, பகிரும் இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.
unknown node