ஒரே போட்டியில் சச்சின் , சங்ககாரா சாதனையை சமன் செய்த ஷாகிப் !

Default Image

நேற்று நடந்த போட்டியில்  பாகிஸ்தான்  அணியுடன் பங்களாதேஷ் அணி  மோதியது . இப்போட்டியில் டாஸ் வென்று  முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் அடுத்தது. பிறகு இறங்கிய பங்களாதேஷ் 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் 77 பந்தில் 64 ரன்கள் விளாசினார். ஷாகிப் நடப்பு உலக்கோப்பையில் 7 அரைசதத்தை அடித்து உள்ளார்.இதன் மூலம் 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் 7 அரைசதம் அடித்து இருந்தார்.தற்போது சச்சின் சாதனையை சமன் செய்தார்.

மேலும் உலகக்கோப்பையில் ஷாகிப் 12 அரைசதம் அடித்து உள்ளார். இதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா  12 அரைசதம் அடித்து இருந்தார்.அவரின் சாதனையையும் ஷாகிப் நேற்றைய போட்டி மூலம் சமன் செய்தார். உலகக்கோப்பையில் தொடர்ந்து எட்டு போட்டிகளில் 40 ரன்னிற்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்