#RCB v SRH: பெங்களூர் பந்துவீச்சில் தடுமாறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

Sunrisers Hyderabad scored 141 for 7 in today's match against Bangalore in the IPL series.

ஐபிஎல் தொடரின் பெங்களூருக்கு எதிரான இன்றைய போட்டியில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் மோதி வருகிறது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர் ஜேசன் ராய் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், மறுபக்கம் அபிஷேக் சர்மா 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமான விளையாடி 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்ஷல் படேல் பந்தில் போல்ட் ஆனார்.

இவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த ஜேசன் ராய் 44 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்கள், பெங்களூரு பந்துவீச்சில் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். இறுதியாக ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்து.

பெங்களூரு அணியை பொறுத்தவரை சிறப்பாக பந்துவீசிய டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில் 142 ரன்கள் அடித்தால் பெங்களூரு அணி வெற்றி பெறும்.