மீண்டும் விவோ நிறுவனத்திற்கு ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்? – பிசிசிஐ தகவல்

It has been reported that the BCCI is planning to give back the title sponsorship to Vivo for the IPL 2021 season.

ஐபிஎல் 2021 சீசனின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் மீண்டும் விவோ நிறுவனத்திற்கு வழங்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022-ஆம் ஆண்டு வரை விவோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருந்த நிலையில், சீன விவகாரத்தால் கடந்த சீசன் ஸ்பான்சர்ஷிப் மட்டும் ட்ரீம் 11 நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு நடைபெற இருக்கும் 2021-ஐபிஎல் தொடருக்கு மீண்டும் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் விவோ நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இதுவரை 13 சீசன்கள் ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், 14வது சீசனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் நடைபெற வேண்டிய 13-வது ஐபிஎல் தொடர், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்தது. நடப்பாண்டு தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு 8 அணிகளில் இருந்து 57 வீரர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், பிப்18ல் வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.