INDvsBAN TESTSERIES: இந்தியாவிற்கு வெற்றி பெற 145 ரன்கள் இலக்கு! வங்கதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்.!

Default Image

இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்.

இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கும், இந்தியா 314 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.

87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ்(73), சாகிர் ஹசன்(51) ஆகியோர் உதவியுடன் 231 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்தியா சார்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்களும், அஸ்வின் மற்றும் சிராஜ் தலா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர்.

இந்தியா வெற்றி பெற 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி, தற்போது வரை 1 விக்கெட்டை இழந்து 12 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்