INDvsBAN ODI: இந்திய அணி அபார வெற்றி! 182 ரன்னுக்கு வங்கதேச அணி ஆல் அவுட்.!

Default Image

இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.

இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன்(210ரன்கள்) மற்றும் விராட் கோலி (113 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் இந்தியா 50 ஓவர்களில் 409/8 ரன்கள் குவித்தது.

வங்கதேச அணி சார்பில் எபடோட் ஹொசைன், தஸ்கின் அகமது மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர். 411 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கம் முதலே தடுமாறி வந்தது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வந்தது.

முடிவில் 34 ஓவர்களில் அந்த அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 182 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 43 ரன்களும், லிட்டன் தாஸ் 29 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களும், அக்சர் படேல் மற்றும் உம்ரன் மாலிக் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் இந்தியா 227 ரன்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்