INDvENG : மூன்றாவது டி20 போட்டியில் விளையாடுவாரா முகமது ஷமி? வெளியான முக்கிய தகவல்!
இந்தியா vs இங்கிலாந்து 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் வருகை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. எனவே, இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ள 3-வது போட்டியிலாவது அவர் அணிக்கு திரும்புவாரா என்கிற எதிர்பரப்பு எழுந்த்துள்ளது. ஆனால், தற்போது வந்துள்ள முக்கிய தகவலின் படி அவர் இந்த தொடரில் இடம்பெற்று விளையாடுவது சந்தேகம் தான் என தெரியவந்துள்ளது.
ஏனென்றால், முகமது ஷமி சுமார் 14 மாதங்கள் இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார். அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இருக்கிறது என்பதால் அதற்கு முந்தைய தொடரான இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் அணிக்கு திரும்பியுள்ளார். இருப்பினும் இன்னும் முழுவதுமாக அவர் சரியாகவில்லை என்பதால் அவர் பயிற்சி எடுத்து வருவதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் எனவே, இந்த தொடரில் நிறைய போட்டிகள் உள்ளன, சில போட்டிகளை அவர் தவறவிட்டால் பரவாயில்லை எனவும் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா தெரிவித்தார்.
முகமது ஷமி அணிக்கு திரும்புவது குறித்து முகமது ஷமியின் குழந்தை பருவ பயிற்சியாளர் பதுருதீன் அவர் முழுமையாக உடற்தகுதியுடன் இருப்பதாகவும், தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட முடியும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். முதல் டி20க்காக கொல்கத்தா செல்வதற்கு முன்பு ஷமியுடன் தொலைபேசியில் பேசியதாக பத்ருதீன் கூறியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அது ஒரு புறம் இருக்க மற்றோரு பக்கம் “டி20 போட்டிகளில் முகமது ஷமி அந்த அளவுக்கு தேவையில்லை என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகவும், அவர் முழு பலத்துடன் பந்துவீசுவதாகவும், இரண்டு கிலோ எடையையும் குறைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஒருநாள் போட்டி தொடங்கியவுடன் அவர் விளையாட தயாராகிவிடுவார் எனவும் கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. எந்த போட்டியில் சாமி அணிக்கு திரும்புவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.