ஆஸ்ரேலியாவை விரட்டி வீழ்த்திய இந்திய பெண் சிங்கங்கள்…!!!அபார வெற்றி..!!!

Default Image

இந்திய மகளிரணி ஆஸ்திரேலிய அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Image result for australia vs india women's cricket world cup

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்று விளையடி வருகிறது.இந்த லீக் சுற்றில் பி பிரிவில் உள்ள இந்திய அணி ஏற்கனவே 3 போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்று ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது.

Image result for australia vs india women's cricket world cup

வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு களமிரங்கிய இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி போட்டியில் டாஸ் போடப்பட்டது.இந்த டாஸில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.பேட்டிங்கில் களமிரங்கிய இந்திய சிங்கங்கள் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய பந்துக்களை சிதறவிட்டு அடித்து நொறுக்கி அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தானா 87 ரன்களும் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 43 ரன்களை எடுத்து அணியின் ரன் குவிப்பிற்கு வித்திட்டனர்.

Image result for australia vs india women's cricket world cup

ஆஸ்திரேலியா அணிக்கு  168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அந்த அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய சிங்ககளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

Image result for australia vs india women's cricket world cup

அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனிடையே 48 ரன் கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Image result for australia vs india women's cricket world cup

ஆஸ்திரேலியாவை 119 ரன்களில் சுருட்டிய இந்திய அணியின் பந்து விச்சில் அனுஜா பாட்டில் 3 விக்கெட்டுகளையும் மற்றும் தீப்தி சர்மா, ராதா யாதவ், பூனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் அணி குரூப் பி பிரிவில் உள்ள அணிகளில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது.

Related image

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்