மும்பை :நடைபெற போகும் மெகா ஏலத்தில், ஐபிஎல் அணிகள் இறுதியாக தக்க வைக்க போகும் வீரர்களின் பட்டியலை இன்னும் சில தினங்களில் அந்தந்த அணி உரிமையாளர்கள் வெளியிடவுள்ளனர். அதன் பின்னரே ஐபிஎல் மெகா ஏலம் எப்போது நடக்கும் என்ற அதிகாரப்பூர்வத் தேதியை பிசிசிஐ வெளியிடும்.
இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவர்களின் பங்கிற்கு ஒவ்வொரு அணியில் இந்த வீரரை தக்க வைப்போம் என சில பேட்டிகளில் கூறி வருகின்றனர்.
அதன்படி, இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த 5 வீரர்களை தக்க வைப்பேன் என கூறியிருக்கிறார். அதிலும், தோனி தான் எனது முதல் சாய்ஸ்ஸாக இருப்பார் எனவும் கூறியிருக்கிறார்.
அவர் அந்த பேட்டியில் கூறியதாவது, “தோனி விளையாடுவாரா? இல்லையா? என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால், அவர் விளையாடினாலும், அதுவும் இந்த சீசனில் அவர் அன்கேப்ட் வீரராகக் இருந்தாலும் அவர் தான் எனது ஃபஸ்ட் சாய்ஸ்ஸாக இருப்பார்.
அவருக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா இருப்பார், அதற்கு அடுத்து ரச்சின் ரவீந்திரராக இருப்பார். பிறகு சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாடை கண்டிப்பாக தக்கவைப்பேன். எனவே, இந்த 4 வீரர்களையும் தக்க வைப்பேன் என்பது உறுதி.
அவர்களைத் தவிர்த்து சிறந்த பந்து வீச்சாளரான மதீஷ பத்திரனாவையும் தக்க வைத்துக் கொள்வேன்”, என ஹர்பஜன் சிங் ஸ்டார்ஸ் போர்ட்ஸிடம் பேசிய போது கூறினார். ஹர்பஜன் தேர்ந்தெடுத்துள்ள வீரர்களை கண்ட சென்னை ரசிகர்கள் பலரும் தங்களது தேர்வும் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
unknown node