“சென்னை ஃபேமிலி எப்படி இருக்கீங்க”! வைரலாகும் ஜடேஜா இன்ஸ்டா பதிவு!

இந்திய அணி வீரரான ரவீந்திர ஜடேஜா அவரது இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பதிவிட்ட பதிவானது தற்போது வைரலாகி வருகிறது.

Ravindra Jadeja

சென்னை : இந்திய அணியின் ஆல்-ரவுண்டரூம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ரவீந்திர ஜடேஜா நேற்று அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து மீசையை முறுக்கி கொண்டு’ அழகாக போஸ் கொடுத்திருந்தார்.

அந்த போட்டோவுடன் அந்த பதிவில், “ஹலோ மை சென்னை ஃபேமிலி எல்லாரும் எப்படி இருக்கீங்க” என தமிழில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது சமூகத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது. மேலும், அவரது அந்த பதிவுக்கு தற்போது வரை பத்தாயிரத்திற்கும் மேல் உள்ள இன்ஸ்டா பயனர்கள் கமெண்ட் செய்திருக்கின்றனர்.

அந்த கமென்ட்ஸில் பெரும்பாலான ரசிகர்கள், “தளபதி விஜயை ஞாபகப்படுத்தும் விதமாக ஜடேஜாவின் உடையும் போஸ்ஸும் இருக்கிறது” என கூறி வருகின்றனர். மேலும் பலர், “சினிமாவில் தளபதி விஜய் என்றால் கிரிக்கெட்டின் தளபதி ஜடேஜா தான்” என கமென்ட் செய்திருக்கின்றனர்.

ஜடேஜாவின் இந்த புகைப்படம், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜடேஜா இப்படி பதிவு செய்வது இது முதல் முறை கிடையாது. அவர் ஐபிஎல் தொடரில் நடைபெறும் போது இது போன்ற பதிவுகளை பதிவுடுவார்.

அதே நேரம் அவருக்கு திடீரென சென்னை அணியுடன் சேப்பாகில் விளையாடியது நினைவுக்கு வந்தாலும் இது போன்ற பதிவுகளை பதிவிட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் வைத்திருப்பார். மேலும், இவரது இந்த பதிவால் கிரிக்கெட் மட்டுமின்றி சமூக வலைதளத்திலும் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்