நம்ம சிஎஸ்கேவுக்கு எப்போது எல்லாம் போட்டி தெரியுமா ..? லிஸ்ட் இதோ !!

IPL 2024 : ஐபிஎல் தொடரின் 2-வது பாதி அட்டவணையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் X தளத்தில் தற்போது  வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணையில் சென்னை அணிக்கு எப்போதெல்லாம் போட்டி நடைபெறும் என்பதை பார்க்கலாம் ..!

ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியாக ஜொலித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குஎப்போதெல்லாம் எந்தெந்த மைதானத்தில் போட்டி நடைபெற போகிறது, யாருடன் நடைபெற போகிறது என்பதை தனி அட்டவணையாக தற்போது பார்க்கலாம். ஐபிஎல் தொடரின் 17-வது சீசனாக தற்போது நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் முதல் பொடியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், பெங்களுரு அணியும் மோதியது.

இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதற்கு பிறகு பெங்களூரு அணியுடன் வருகிற மே-18ம் தேதி இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதுவே இந்த தொடரின் சென்னை அணிக்கு கடைசி போட்டியாகும்.

ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் தலா 7 போட்டிகள் அவர்களது சொந்த மண்ணில் வைத்து நடைபெறும். அதன் படி பார்க்கையில் சென்னை அணிக்கு ஏற்கனவே சேப்பாக்கத்தில் ஒரு போட்டி நடந்து முடிந்துள்ளது. மேலும், 6 போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள நிலையில் அடுத்து சென்னை அணி சேப்பாக்கத்தில் விளையாடும் போட்டி கொல்கத்தா அணியுடன் வருகிற ஏப்ரல்-8ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை  ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டியான மும்பை அணியுடனான போட்டி வருகிற ஏப்ரல்-14 ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முறை மும்பை அணியுடன் ஒரு முறை மட்டுமே சென்னை அணி மோதுகிறது அதுவும் வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் என்பதால் இந்த போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

CSK MATCHES

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்