இப்படியா ரன் அடிப்பீர்கள்… சுப்மான் கில்லை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் (IND vs ENG) முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்து வருகிறது. ஆனால் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடாமல் 23 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதைத் தொடர்ந்து, இப்போது சுப்மன் கில்லை சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். கில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். சாரா டெண்டுல்கரின் நினைப்பில் சுப்மன் கில் தொலைந்து போனதாக சில ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதேசமயம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கில் நீக்கப்பட வேண்டும் என்று சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
IndvsEng : முதல் நாள் முடிவு…119 ரன்கள் குவித்த இந்தியா!!
கடந்த பல டெஸ்ட் போட்டிகளாக சுப்மன் கில் சரியாக விளையாடாதபோதிலும் அவருக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஏன் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு அளித்து வருகிறார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் மற்றும் சுப்மன் கில் இருவரும் காதலித்து வருவதாக நீண்ட ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை. சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 13, 18, 6, 10, 29*, 2, 26, 36, 10, 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சுப்மன் கில் எந்த போட்டிகளில் சரியாக விளையாடவில்லையோ அப்பொழுது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கருடன் , சுப்மன் கில்லை தொடர்புபடுத்தி ரோல் செய்து வருகின்றனர்.
Whole stadium is chanting “HAMARI BHABHI KAISI HO SARA BHABHI JAISI HO”… #INDvsENG @ShubmanGill
— KL RAHUL (@kl_rahul0086) January 26, 2024
Gill could get dropped for the 3rd Test if he doesn’t have a substantial innings before that.
— Gurkirat Singh Gill (@gurkiratsgill) January 26, 2024
????ka Prince Phirse Expose Hogaya ????????????☕#ShubmanGill #Gill #INDvsENG pic.twitter.com/vNB6OayPMr
— Maze (@Maze_6999) January 26, 2024
SHUBMAN GILL WHAT HAVE YOU DONEpic.twitter.com/lS3yvJfDOw
— Stochastic Carrot (@trueambivert) January 26, 2024
Shubman Gill utilising his chances in Test Cricket????
#INDvsENGpic.twitter.com/yRaDxVwTrH
— KKR Bhakt ???????? ™ (@KKRSince2011) January 26, 2024
Shubman Gill is the biggest fraud of this era.
Agree or argue with the wall ????#INDvsENG || #INDvENG || #AUSvWI#ShubmanGill pic.twitter.com/RnAtYHP0YK
— Vetrenny ????️ (@Vetrenny136) January 26, 2024