இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

Default Image

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை (ஜூலை 18) அறிவித்தார்.

31 வயதான ஸ்டோக்ஸ், செவ்வாயன்று டர்ஹாமில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டி தான்  தனக்கு கடைசியாக இருக்கும் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,இது “நம்பமுடியாத கடினமான முடிவு” என்று கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான பிறகு, ஸ்டோக்ஸ் 3 சதங்கள் உட்பட 2919 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் அவர்  74 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

2019 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 84* ரன்கள் எடுத்தது போட்டியை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றார் ,அப்போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை  வென்றது.

 

View this post on Instagram

 

A post shared by Ben Stokes (@stokesy)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்