டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.
2022-ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டன் கேஎல் ராகுலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி:ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஆர் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், ஒய் சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, பி.குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.காத்திருப்பு வீரர்கள்:முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
unknown node